தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி அம்பிகா (வயது 38). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் மன உளைச்சலில் இருந்த அம்பிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.