மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
வெவ்வேறு சம்பவத்தில் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
நச்சுகிழங்கு
திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). மீனவரான இவர் மங்களுர் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊருக்கு வந்த முனியசாமி மீண்டும் மங்களுர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், கடல் தொழிலுக்கு செல்லாமல் மீண்டும் வீட்டுக்கு மதுபோதையில் வந்தார்.
அப்போது அவர் திடீரென்று வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த அவரது மனைவி முனீஸ்வரி இதுகுறித்து விசாரித்துள்ளார். அதற்கு முனியசாமி மனம் உடைந்து நச்சுக்கிழங்கை தின்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியசாமி இறந்துவிட்டார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
ராமநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் என்ற ரஞ்சித் (32). இவரின் மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.