விஷம் குடித்து தாய் தற்கொலை

2 மகள்களும் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-02-08 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி. டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 47). இவர்களுக்கு 3 மகள்கள். இதில் மூத்த மகள் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் 2-வது மகளும் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனது 2 மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவருத்தம் அடைந்த தமிழரசி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்்று உடல்நிலை கவலைக்கிடமாகவே ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தமிழரசி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக காமாட்சி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்