பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவருடைய மகன் மிதுன் (வயது 31). விசைத்தறி தொழிலாளி. இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிதுன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மிதுைன பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.