மோட்டார்சைக்கிளுக்கு தவணை கட்ட முடியாததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மோட்டார்சைக்கிளுக்கு தவணை தொகை கட்ட முடியாததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-05 20:40 GMT

கடத்தூர்

மோட்டார்சைக்கிளுக்கு தவணை தொகை கட்ட முடியாததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் வினோத்குமார் (வயது 24). பி.ஏ. பட்டதாரி.. இவர் கோபி கரட்டூர் ஆர்ச் அருகே உள்ள ஒரு துரித உணவு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தவணை முறையில் வினோத்குமார் மோட்டார்சைக்கிள் வாங்கி இருந்தார். அதற்கு பணம் கட்ட தந்தையிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ஒரு வாரம் பொறுத்துக்கொள். கட்டிவிடலாம் என கூறியதாக தெரிகிறது. மேலும் வினோத்குமார் உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

தற்கொலை

கடனில் வாங்கிய மோட்டார்சைக்கிளுக்கு பணம் கட்ட முடியாததாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் வினோத்குமார் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சேலையால் மின்விசிறியில் வினோத்குமார் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே வினோத்குமார் இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்