சரக்கு ஆட்டோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

பரமத்திவேலூரில் சரக்கு ஆட்டோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-01-29 19:03 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், நல்லியம்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனசீலன் (வயது 32). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு விட்டு வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தும் பெண் கிடைக்கவில்லை. மேலும் சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனை கட்டமுடியாமல் இருந்து வந்துள்ளார்.

திருமணம் ஆகாததாலும், கடனை கட்டமுடியாததாலும் தனசீலன் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தனசீலன் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று தனசீலன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்திவேலூரிலர் சரக்கு ஆட்டோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்