நாகரசம்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2023-01-29 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி தாலுகா அகரம் அருகே உள்ள குடிமேனஅள்ளியை சேர்ந்தவர் ரங்கபெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 48). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் அதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் கடந்த 27-ந் தேதி அவர் நாகரசம்பட்டி அரசு பள்ளி அருகில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்