கம்பைநல்லூர் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

Update: 2023-01-23 18:45 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி காளியம்மன் (வயது 35). நேற்று முன்தினம் அதிகாலை குடும்ப தகராறு காரணமாக காளியம்மன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை ரமேஷ் காப்பாற்ற முயன்றபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காளியம்மன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்