கூலித்தொழிலாளி தற்கொலை
மொளசி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே மொளசி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 53). இவரது கணவர் பொன்னுசாமி (70). இருவரும் விவசாய கூலிவேலை செய்து வந்தனர். பொன்னுசாமி கடந்த சில மாதங்களாக முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 17-ந் தேதி பொன்னுசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பொன்னுசாமி நேற்று உயிரிழந்தார். இது குறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.