வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நகரியில் குடியிருந்து வருபவர் செல்வகுமார் மகன் தினேஷ் (35) ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். ஜெயந்திக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.