மகள், மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

மகள், மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-01-13 22:39 GMT

டி.என்.பாளையம்

மகள், மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

தி.மு.க. கவுன்சிலர்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சாலை ரோடு 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மரகதம். 5-வார்டு தி.மு.க. கவுன்சிலர். இவர்களுடைய மகள் ரேணு, மகன் நவீன்குமார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் ரேணு இறந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த 5 மதங்களுக்கு முன்பு மரகதமும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

மகளும், மனைவியும் இறந்துவிட்டதால் ஞானராஜ் மனவேதனையில் காணப்பட்டார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நவீன்குமார் பெயிண்டிங் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு ஞானராஜ் தொங்கிக்கொண்டு இருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ஞானராஜ் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து ஞானராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியும், மகளும் இறந்து துக்கத்தில் ஞானராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்