விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை

திருப்புவனம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-07 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது அல்லிநகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. விவசாயி. இவரது இளைய மகன் முத்துராஜா (வயது 20). கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் கபடி விளையாடி வந்து உள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் முத்துராஜாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

அப்போது தோட்டத்தில் விஷம் குடித்து மயக்க நிலையில் அவர் கிடந்து உள்ளார். உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே முத்துராஜா இறந்துவிட்டதாக கூறி உள்ளார். இது குறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்