விஷம் குடித்து விவசாயி தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-21 18:45 GMT

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே உள்ள கொடகரஅள்ளியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதை ராம்குமாரின் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்