ஊத்தங்கரை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

Update: 2022-11-11 18:45 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள செலகாரன்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இந்தநிலையில் சின்னராஜ் மது குடிக்க தனது மனைவி அலமேலுவிடம் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து, எதற்காக இப்படி மது குடித்து கொண்டிருக்கிறீர்கள்? என கண்டித்தார். இதில் மனமுடைந்த சின்னராஜ், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்