விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள முசுண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு கால் விரல்களை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதன் காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்த ஆறுமுகம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.