வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

காவேரிப்பட்டணம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பழனி (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த பழனி சம்பவத்தன்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்து தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஅள்ளியை சேர்ந்தவர் திருப்பதி என்கிற சரவணன் (35). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பலமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த திருப்பதி, கடந்த 15-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்