விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-10 20:19 GMT

திருவையாறு அருகே உள்ள அணைக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது77). இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தாக்கத்தால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்