கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

சோழசிராமணி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-22 19:09 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54). கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரிமுத்து தினேஷிடம் மது அருந்தக்கூடாது என பலமுறை கண்டித்துள்ளார். அதனை மகன் கேட்காததால் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கொட்டகையில் மாரிமுத்து நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி இருக்கிறார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌. சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்