கவுந்தப்பாடி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

கவுந்தப்பாடி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Update: 2022-09-15 21:44 GMT

கவுந்தப்பாடி

உள்ள சின்னபுலியூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் சீதப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 75). இவர் உறவினர் ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமிக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் குடித்து லட்சுமி மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியில் லட்சுமி இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்