ஏரியூர்:
பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையை சேர்ந்தவர் கருப்பு செட்டி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 31). இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண், பெண் குழந்தையும் உள்ளன. இந்தநிலையில் ராஜ்குமாருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் பெரும்பாலை பாலத்தின் அருகே உள்ள மரத்தில் ராஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.