அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; சாவில் சந்தேகம் என போலீசில் தாய் புகார்

அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-08-19 20:29 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

கணவன்-மனைவி தகராறு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரும், குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த தேவயானி (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா என்ற 3 வயது மகள் உள்ளார்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணிக்கும், தேவயானிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு்ள்ளது.

தூக்குப்போட்டு் தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை தேவயானி வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவயானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தேவயானியின் தாய் ரமணி அம்மாபேட்ைட போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

தாய் புகார்

அந்த புகாரில் அவர், 'எனது மகள் தேவயானியின் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தேவயானிக்கு திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்