மாட்டு வியாபாரி தற்கொலை
பாலக்கோடு மாட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு மைதீன் நகரை சேர்ந்தவா் அம்சாத் (வயது38). மாட்டு வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.