பிளஸ்-1 மாணவன் தற்கொலை

நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-29 16:27 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிளஸ்-1 மாணவன்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாநூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் பூரணபிரதாஷ் (வயது 17). இவன் ஏலகிரி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். மாணவனுக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்