ரேஷன் கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

ரேஷன் கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-27 20:05 GMT

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது குப்பணம்பட்டி.இந்த ஊரைச்சேர்ந்தவர் மாயி (வயது47). அதே ஊரில் உள்ள குப்பணம்பட்டி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் நியாயவிலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் சம்பளம் சரியாக வழங்காததால் விரக்தியில் இருந்து வந்த மாயி, நேற்று காலை கடைக்கு வேலைக்கு சென்றவர், கடையின் அருகிலேயே விஷமருந்தி மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொள் வதற்கு முன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், தனது மனைவியை தொடர்பு கொண்டு சம்பளம் கொடுக்காததால் விரக்தியில் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்