ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட வாலிபர் தற்கொலை

தர்மபுரியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-27 16:50 GMT

தர்மபுரியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாமலைபட்டியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தர்மபுரியில் அலுவலகம் அமைத்து அங்கு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் புகழேந்தி தர்மபுரியில் உள்ள அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் புகழேந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தி தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்