காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

பாகலூரில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-24 17:24 GMT

ஓசூர்:

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே உள்ள திருவாலிப்பட்டியை சேர்ந்தவர் மாதவராஜ் (வயது 21). இவர் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பெலத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், காதல் தோல்வியால் மனமுடைந்த மாதவராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்