பரமத்திவேலூர் அருகே 2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர் அருகே 2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
இளம்பெண்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தாலுகா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவருடைய மனைவி சகிலாபானு. இந்த தம்பதியின் மகள் ஜெஸ்சியா (வயது 32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே ஜெஸ்சியாவின் கணவர் இறந்து விட்டார்.
இதனால் ஜெஸ்சியா தனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவேரி நகரில் வசித்து வந்தார். இதனிடையே சர்புதீன் தனது மகள் ஜெஸ்சியாவுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். இதனால் அவர் மனைவியை இழந்த மணமகனை பார்த்து, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கு ஜெஸ்சியா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் முதன் முதலில் திருமணம் செய்யும் நபரையே, தான் 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். ஆனால் சர்புதீன் மனைவியை இழந்த நபருக்கு ஜெஸ்சியாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதனால் ஜெஸ்சியா மனமுடைந்தார்.
இந்தநிலையில் ஜெஸ்சியா நேற்று காலை வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சகிலாபானு, ஜெஸ்சியா அறைக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
பரமத்திவேலூர் அருகே
2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ஜெஸ்சியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.