தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை

ஓசூரில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-22 16:06 GMT

ஓசூர்:

ஓசூர் பெத்த எலத்தகிரியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 56). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்தது. மேலும் இவர் தனியாக வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்