விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மொரப்பூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள மூக்கனூர்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் வசந்த் (வயது 25). இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவி உள்ளார். இவர் மொரப்பூரில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த வசந்த் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.