திருமணமாகாத விரக்தியில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை

Update: 2022-06-23 18:26 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 33). விசைத்தறி தொழிலாளி. இவருடைய தாய், தந்தை 2 பேரும் இறந்து விட்டனர். நந்தகுமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் தனக்கு திருமணமாகவில்லையே என எண்ணி அவர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக அவர் மனஉளைச்சலில் இருந்தார். இதற்கிடையே நேற்று நந்தகுமார் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

அக்கம் பக்கத்தினர்் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நந்தகுமார் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்