தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அடுத்த மரியகவுண்டபள்ளியை சேர்ந்தவர் ராமையா (வயது 57). விவசாயி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா் வீட்டு அருகில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.