மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-06-23 17:23 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சி சங்கரம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 53). இவருக்கு சவுந்தரராஜன், இளையராஜா, விமல்ராஜ் ஆகிய 3 மகன்கள் இருந்தனர். சிங்காரவேலு, அவருடைய மனைவி மற்றும் 3 மகன்கள் என 5 பேர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வசிக்கும் வீடு சிறிய வீடாக உள்ளதாக கூறப்படுகிறது. 5 பேரும் ஒன்றாக வசிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், வீடு கட்டும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் போதிய பண வசதி இல்லாத சூழ்நிலையில் அவர்கள் தடுமாறி வந்ததாக தெரிகிறது. இதில் 2-வது மகன் இளையராஜா (வயது 22) மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜா நேற்று வீட்டில் அருகில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் விஷத்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மோகனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிங்காரவேலு மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்