ஊத்தங்கரை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஊத்தங்கரை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை மாணவி
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன். ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் காவ்யா (வயது17). இவர் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணினி அறிவியல் பாடப்பிரிவு தேர்வு எழுதி இருந்்தார்.
இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாணவி காவ்யா தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி காலை முதலே வீட்டில் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
உருக்கம்
இந்த நிலையில் மாலை மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.