மகராஜகடை அருகே மனைவி இறந்த துக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை

மகராஜகடை அருகே மனைவி இறந்த துக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-05 16:35 GMT

குருபரப்பள்ளி:

மகராஜகடை அருகே மனைவி இறந்த துக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

எலக்ட்ரீசியன்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடையை அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (வயது 33). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ஜோதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குழந்தையை அழைத்து கொண்டு ரவீந்திரகுமார் தனது சொந்த ஊரான சிவானந்தபுரத்திற்கு சென்று விட்டார்.

தற்கொலை

அங்கு மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்