மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-04 18:26 GMT

தர்மபுரி:

தர்மபுரி எரங்காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவருடைய மகள் ஷாலினி (வயது 16). மாணவியான இவர் பிளஸ்- 2 படிப்பை முடித்துள்ளார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்