கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-10-02 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வாலிபர்

பர்கூர் தாலுகா நடுப்பட்டு அருகே உள்ள ஜி.டி.குப்பத்தை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி பெருமாள் (வயது 90). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் கடந்த 23-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி ஆலப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (27). உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 30-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிட்ருகான் சிங் (24). இவர் ஓசூர் அருகே குட்லப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

கடந்த 30-ந் தேதி குடிபோதையில் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்