ஏரியூர் அருகேபள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-09-23 19:30 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

ஏரியூர் அருகே உள்ள பத்திரஅள்ளி ஊராட்சி ஏர்கோல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சசிகலா (வயது14). இவள் பூச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். விடுமுறை தினம் என்பதால், நேற்று வீட்டு வேலைகளை செய்யுமாறு பெற்றோர் கூறி விட்டு வெளியில் சென்றனர்.

பின்னர் அவர்கள் மாலை வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீடு உள்பக்கமாக கதவு தாழிட்டு இருந்தது. கதவை தட்டியும் நீண்டநேரமாக திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகளின் உடலை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து ஏரியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்