வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி திரிஷா(வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 10 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக திரிஷா சின்ன பத்தளப்பள்ளி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் திரிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று திரிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திரிஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.