மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்ன கும்மனூரை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகன் விஷ்வா (வயது17). சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த விஷ்வா விஷம் (எலிபேஸ்ட்) குடித்து மயங்கி கிடந்தான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.