தலைவாசல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-09-04 20:43 GMT

தலைவாசல்

தலைவாசல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அன்னபூரணி (வயது28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெரியசாமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அன்னபூரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியசாமி தலைவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அன்னபூரணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்