ஊத்தங்கரையில் தங்கும் விடுதியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை

Update: 2023-08-31 19:00 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையில் தங்கும் விடுதியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தங்கும் விடுதி

ஊத்தங்கரையில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 60) என்பவர் கடந்து 10 நாட்களாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது கட்டிலுக்கு கீழே அவர் விழுந்து கிடந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் அவரது அறையின் வெளி பகுதியில் விஷ பாட்டில் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், அவர் ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்ததும் தெரியவந்தது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்