ஓசூரில்தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Update: 2023-08-29 19:45 GMT

ஓசூர்

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கீழ் ஆலந்தூர் பக்கமுள்ள கே.ஏ. மோட்டூரை சேர்ந்தவர் பாபு (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாபுவின் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பாபு, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாபு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்