தேன்கனிக்கோட்டை அருகேகாதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
தேன்கனிக்கோட்டை தாலுகா பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 50). இவருடைய மகள் ஷில்பா (23). இவரும், மோகன்ராஜ் என்பவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஷில்பா தனது தந்தை வீட்டிற்கு வந்தார்.
விசாரணை
அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ஷில்பா வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷில்பா இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி விசாரணை நடத்தி வருகிறார்.