சோழசிராமணி அருகேரிக் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-08-07 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55) ரிக் வண்டி டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தங்கராசு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி பிரியா (48) கணவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்