பேரிகை அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

Update: 2023-07-08 19:30 GMT

ஓசூர்:

பேரிகை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள அலசப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அஜித். இவருடைய மனைவி துர்கா (வயது 25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதையடுத்து துர்கா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ்சி. லேப் டெக்னிஷியன் படிப்பில் சேர்ந்தார்.

விசாரணை

இதனை தொடர்ந்து கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக அவருடைய தந்தை முரனிதரனிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என்றும், பின்னர் தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த துர்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்