விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் பன்னிர்செல்வம் பேட்டி

விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் பன்னிர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2022-12-29 10:34 GMT

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். போராட்டமும் நடத்தினார்கள். அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், வேளாண்மை மற்றும் உழவல் நலத்துறை அமைச்சர் பன்னிர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும். இடைத்தரகர்கள் இன்றி கலெக்டர் மேற்பார்வையில் கூட்டறவு, வேளாண்மை அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்