கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து

விக்கிரவாண்டி அருகே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-12-16 18:45 GMT

விக்கிரவாண்டி அடுத்த வெங்கந்துார் கிராமத்திலிருந்து கருப்பு லோடு ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு நேற்று மதியம் 2 மணியளவில் இரண்டு பெட்டிகளுடன் டிராக்டர் ஒன்று சென்றது. டிராக்டரை உடைய நத்தத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 38) என்பவர் ஓட்டினார். இந்நிலையில் முண்டியம்பாக்கம் ஒரத்தூா் ரோட்டில் கொசப்பாளையம் அருகே புதியதாக கட்டியுள்ள பாலத்தினை டிராக்டர் கடக்க முயன்ற போது முதல் பெட்டி பாலத்தை விட்டு வெளியேறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பெட்டியில் இருந்த கரும்புகள் அனைத்து கிழே விழுந்து சாலையில் சிதறியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே மணிகண்டன் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக மாற்று பெட்டியில் கரும்பு லோடை ஏற்றினார். 

Tags:    

மேலும் செய்திகள்