பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வார காலமே உள்ள நிலையில், வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் மூலமாக, நடவு செய்துள்ள செங்கரும்புகள் தற்சமயம் அறுவடை செய்ய தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் விளைந்த செங்கரும்புகள் பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று விவசாய தோட்டங்களில் ரூ.150 வரை விற்பனை ஆனது. மேலும் சரக்கு வேன் மூலமாக, வாங்கி சென்ற வியாபாரிகள் கடைகள் மற்றும் பொது இடங்களில் கொண்டு சென்று கட்டு ஒன்று ரூ.200 மற்றும் ரூ.250 வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் எனவும் இப்பகுதி செங்கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.