அம்முண்டி சர்க்கரை ஆலைமுன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அம்முண்டி சர்க்கரை ஆலைமுன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-27 18:30 GMT

திருவலத்கதை அடுத்த அம்முண்டியில் இயங்கி வரும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆவ்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போன்று கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.195 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊக்கத்தொகை ரூ.500 வழங்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு பலன் அளித்து வந்த பழைய எஸ்.ஏ.பி. முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்