கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-06-23 19:48 GMT

பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செயலாளர் நாக. முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருஆரூரான் சர்க்கரை ஆலையால் விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர் கடன் தொகை முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும். மத்திய- மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகையையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சர்க்கரை ஆலை தொடர்பான எந்தவிதமான பேச்சுவார்த்தையும் விவசாயிகளின் முன்னிலையில் வெளிப்படையாக மட்டுமே நடைபெற வேண்டும். திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சுவாமிமலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்